Tamil news Sri Lanka

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுகின்றாரா ரிஷாட் பதியூதீன்?


தாம் தொடர்ந்தும் எதிர்கட்சியில் இருந்தவாறே, அரசியலில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தாம் வேறு கட்சி எனவும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சி செய்ததாகவும் அவர் கூறுகின்றார்.

எனினும், தமது கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட ஊடகவியலாளர், எதிர்வரும் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க போவதில்லையா? என கேள்வி எழுப்பினார்.

தான் அவ்வாறு கூறவில்லை என ரிஷாட் பதியூதீன் பதிலளித்தார்.

தான் விளக்கமறியலில் இருக்கும் சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடம் இவ்வாறான கேள்வியொன்று எழுப்பும் போது, தாம் கூட்டணி அமைக்கவில்லை என அவர் பதிலளித்தார் என ரிஷாட் பதியூதீன் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் தாம் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து, எதிர்கட்சியின் கடமைகளையே முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

NEWS JUST IN :- பொது போக்குவரத்து தொடர்பில் சற்று முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பு

Rohan

சவூதியில் Omicron தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டுபிடிப்பு

Rohan

இலங்கையில் 5 மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy