நாடு முழுவதும் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் தமது வாகனங்களிலுள்ள எரிபொருள் தாங்கிகளில் முழுமையாகவும், கொள்கலன்களில் முழுமையாகவும் எரிபொருளை கொள்வனவு செய்வார்களாயின், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இயல்பாகவே ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எரிபொருள் தட்டு்ப்பாடு ஏற்படும் என ஊடகங்களில் வெளியிடப்பட்ட போலி பிரசாரம் காரணமாகவே, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் உதய கம்மன்பில கூறுகின்றார். (TrueCeylon)