Tamil news Sri Lanka

20 ரூபாவால் பறிபோன இளைஞனின் உயிர்! மூவருக்கான மரண தண்டனை உறுதியானது


20 ரூபாய்க்கு ஏற்பட்ட தகராறில் 29 வயது ஆண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதுடன், ஒரு பெண் உட்பட மூவர் படுகாயமடைந்த சம்பவத்தில் மூன்று குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு இருந்த மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

லக்மால் பிரதீப் பிரேமச்சந்திர, சுமித் ஸ்ரீ லால், சுதத் குமாரவு என்போருக்கே தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மூன்று மனுக்களையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து மரண தண்டனையை உறுதி செய்தது.

1996 நவம்பர் 2இல் பன்னிப்பிட்டிய சம்பவத்தில் சுசந்த பெரேரா என்ற 29 வயது இளைஞனை வெட்டிக் கொலை செய்தமை மற்றும் இறந்தவரின் உறவினர்கள் மூவருக்குப் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மேல் நீதிமன்றம், 2018 ஜூலை 18ஆம் திகதி மூவருக்கு மரண தண்டனையையும், மற்ற குற்றவாளிகளை விடுவித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.

மேல் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி குற்றவாளிகள் மூவரும் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.



Source link

Related posts

இராஜினாமா கடிதத்துடன் ஜனாதிபதியை சந்திக்கச் சென்றாரா அலி சப்ரி??

Rohan

இலங்கையில் உயிரிழப்புக்கள் 14,000 ஐ தாண்டியது – Trueceylon News (Tamil)

Rohan

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy