Tamil news Sri Lanka

தற்போதைய அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து அரசாங்கமும் பாரிய தவறை செய்துள்ளது – அமைச்சர் பகிரங்கம்


தற்போதைய அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து அரசாங்கமும் பாரிய தவறொன்றை செய்துள்ளது.

அரசில் தீர்மானமொன்றை எடுத்துக்கொண்டு தங்களுடைய வாக்குகளுக்காக அரச சேவை நிரப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சா ளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (16) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது இதை குறிப்பிட்டார்.

குறிப்பாக, எங்களுடைய அமைச்சின் கீழுள்ள ஒரு நிறுவனத்தில் 2016 ஆம் ஆண்டு சுயமாக ஓய்வுபெறும் முறையொன்றை முன்வைத்து 600 பேர் ஓய்வுபெற்றுச் சென்றனர்.

ஆனால், 2021 ஆம் ஆண்டு அதே 600பேர் அமைச்சர்கள் அல்லது அரசாங்கத்தினால் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அரசாங்கமும் அமைச்சர்களும் அரச சேவைகளை நிரப்புவதற்கு முன்னெடுக்கும் முயற்சிகளே இதற்கு காரணம்.

இதனால் அரச நிறுவனங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சுமையினையே நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். முற்றாக, அரச சேவை மற்றும் அரச அதிகாரிகள் நாட்டுக்கு சுமை என்றோ அவர் கூறவில்லை என்றார்



Source link

Related posts

மூன்று மாவட்டங்களுக்கு 2ம் நிலை மண்சரிவு அபாயம் l 6 மாவட்டங்கள் அபாயத்தில்

Rohan

மலையக இன அழிப்புக்கு இது அடையாளமா? – Trueceylon News (Tamil)

Rohan

நாடு முழுமையாக திறக்கும் திகதி வெளியானது – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy