பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமின் உதவியாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய ஒருவர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி இலக்கம் 4 ஆம் பிரிவைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் சஹ்ரான் ஹாசிமின் உதவியாளர்களுடன் தொலைபேசி ஊடாக தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. (TrueCeylon)