கண்டி − கொழும்பு பிரதான வீதியில் மூடப்பட்டிருந்த பஹல கடுகண்ணாவ பகுதி இன்று முதல் மீள திறக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.
பஹல கடுகண்ணாவ பகுதியில் ஒரு வழி பாதை மாத்திரம் இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் திறக்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் காணப்படுகின்ற நிலையில், ஒரு வழியை மாத்திரம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிடுகின்றது.
சாரதிகள் இயலுமானளவு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். (TrueCeylon)