நாட்டில் நேற்றைய தினம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,057 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், நேற்று 13 ஆண்களும், 10 பெண்களும் உயிரிழந்தவர்களில் உள்ளடங்குகின்றனர்.