Tamil news Sri Lanka

BREAKING NEWS; எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமானது ஐ.ம.சக்தியின் மாபெரும் போராட்டம்


அரசாங்கத்திற்கு எதிராக சஜித் தலைமையிலான எதிர்க்கட்சியினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட இருந்த ஆர்ப்பாட்டம் சற்றுமுன் ஆரம்பமானது.

கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பொரளையில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

நாட்டின் அனைத்து பகுதியில் இருந்தும் மக்கள் வருகைத்தந்து இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வருகைத்தந்த மக்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கையை தடுக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் மஹிந்தவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பொரளை பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள் கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்தா ஜயசூரியவினால்   நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

கிண்ணியா படகு விபத்து l உயிரிழப்புக்கள் மேலும் அதிகரித்தன

Rohan

6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது

Rohan

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, CIDக்கு பிரச்சனம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy