Tamil news Sri Lanka

தொழிற்துறையாக பதிவு செய்யப்படும் இலங்கை சினிமா


நாட்டின் சினிமா துறையை தொழிற்துறையாக பதிவு செய்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் பிரதமர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

சினிமாத்துறையின் மேம்பாட்டுக்காகவும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை உள்ளூர் சினிமாத்துறையை, ஒரு தொழிற்துறையாக சட்டரீதியாக வெளியிடப்படாமையால் அதன் அளவும் விருத்தியும் சிறியளவில் உள்ளூர் வணிக வாய்ப்புக்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் சினிமாத்துறையை சார்ந்தவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் சினிமாத்துறையை முன்னேற்றுதல் மற்றும் ஊக்குவிப்பதன் மூலம் பல வாழ்வாதார வழிகள் உருவாதல், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார நவீனமயப்படுத்தல், சுற்றுலாத்துறை மற்றும் கல்வி போன்ற துறைகளில் பங்களிப்புச் செய்தல் போன்ற பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அடையாளங் காணப்பட்டுள்ளது.



Source link

Related posts

அரச பாடசாலைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

Rohan

ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அதிரடி அழைப்பு l அரசாங்கத்தின் தீர்மானம்?

Rohan

இந்திய பிரதமருடன், பஷில் ராஜபக்ஸ இன்று சந்திப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy