Tamil news Sri Lanka

கொழும்பிற்குள் வரவிடாது ஐ.ம.சக்தியை தடுக்க பொலிஸார் வகுத்துள்ள திட்டம்?


எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிற்காக ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு நகருக்குள் இன்று (16) பிரவேசிக்கவுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ள பின்னணியில், அதனை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிக்கு அமைய, அனுமதியின்றி மக்களை ஒன்று திரட்டுவது தடை செய்யப்பட்டது என அவர் குறிப்பிடுகின்றார்.

கொழும்பு நகருக்குள் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில், 7 நீதவான் நீதிமன்றங்களினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, கூட்டமொன்றை நடத்துவதற்காக பொதுமக்கள் ஒன்று கூடுதல், மக்களை ஒன்று திரட்டுதல் மற்றும் கலந்துக்கொள்ளுதல் ஆகியன சட்டவிரோதமானது என அவர் தெரிவிக்கின்றார்.

கட்டளையை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். (TrueCeylon)



Source link

Related posts

இலங்கைக்கு படையெடுத்துள்ள பிரித்தானிய மற்றும் இந்திய போர் கப்பல்கள்

Rohan

தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வது குறித்து இராணுவ தளபதி வெளியிட்ட கருத்து

Rohan

BREAKING NEWS :- நாடு முழுவதும் இருள் சூழ்ந்தது – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy