Tamil news Sri Lanka

டிசம்பர் மாதம் இலங்கையர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருக்கின்றது


நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் டிசம்பர் மாதமளவில் மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தனாயக்க இதை தெரிவித்துள்ளார்.

அத்துடன் மெனிங் சந்தைக்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறி தொகை தற்போது 60 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இதற்கு முன்னர் நாளாந்தம் சுமார் 2 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் கிடைக்கப்பெற்றன.

இது வழமையாகக் கிடைக்கப்பெறும் மரக்கறிகளை விடவும் 40 சதவீத வீழ்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கெப்பிட்டிபொல மொத்த பொருளாதார மத்திய நிலையத்தில் நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறிகள் 80 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளன.

மேலும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் 75 சதவீத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அங்குள்ள வர்த்தக சங்கத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தநிலை தொடருமாயின் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.



Source link

Related posts

லிட்ரோ இறக்குமதி செய்த எரிவாயு தொகை நிராகரிப்பு

Rohan

இலங்கையின் சில பகுதிகளுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை (WEATHER MAP)

Rohan

PUBG – க்கு அடிமையாகி முழு குடும்பத்தையும் கொன்று குவித்த 17 வயது இளைஞன்!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy