2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று (12) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மதுபானங்களுக்கான விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, 750 மில்லிலீற்றர் உள்நாட்டு மதுபான போத்தலின் விலையை 96 ரூபாவாலும், ஏனைய உள்நாட்டு மதுபான போத்தல்களின் விலைகளை 103 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
750 மில்லிலீற்றர் வெளிநாட்டு மதுபான போத்தலின் விலையை 126 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
750 மில்லிலீற்றல் வயின் போத்தலின் விலை 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
5 வீதத்தற்கு குறைவான செறிவை கொண்ட 350 லீற்றர் பியர் போத்தல் ஒன்றின் விலையை 3 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 வீதத்தற்கு அதிக செறிவை கொண்ட 350 லீற்றர் பியர் போத்தல் ஒன்றின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)