Tamil news Sri Lanka

கொழும்பில் 16ம் திகதி நடக்கப் போவதை, ஐ.ம.ச கூறுகின்றது


எவ்வாறான தடைகள் வந்தாலும், எதிர்வரும் 16ம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தை திட்டமிட்டவாறு கொழும்பில் நடத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.

தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவிக்கின்றார்.

கொவிட் தொற்றினால் 250 முதல் 300 பேர் வரை உயிரிழக்கும் போது மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் வெளியிடப்படாத வர்த்தமானி அறிவித்தல், தற்போது வெளியிடப்படுவதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறான சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், மக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் 16ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

வாழ்க்கை செலவு அதிகரிக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட காரணங்களை முன்னிலைப்படுத்தி, கொழும்பு ஹயிட் பார்க் மைதானத்தில் எதிர்வரும் 16ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு பாரிய எதிர்ப்பு பேரணியை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

எரிவாயு வெடிப்பிலிருந்து பெண்ணை காப்பாற்றிய தலைகவசம் (VIDEO)

Rohan

3 மாதங்களுக்கு சீமெந்து வாங்காதீர்கள்

Rohan

வெளியானது சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy