இலங்கையின் 76ஆம் வரவு செலவு திட்ட அறிக்கை பாராளுமன்றத்தில் நேற்று (12) தாக்கல் செய்யப்பட்டது.
2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ நேற்று (12) தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.
இதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான எதிர்பார்க்கப்படும் முழுமையான வருமானமாக 2,284 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்கப்படும் செலவீனமாக 3,912 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட துண்டு விழும் தொகையாக 1,628 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் (12) சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (13) முதல் 7 தினங்களுக்கு இடம்பெற்று, 22ம் திகதி வாக்கெடுப்பு நடைபெறும்.
அதனைத் தொடர்ந்தும், 3ம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று, இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)