விபத்துக்குள்ளாகும் வாகன உரிமையாளர்களிடமிருந்து தண்டப்பணமொன்றை அறவிடுவதற்கான யோசனையொன்று, 2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது.
வாகன விபத்துக்களை குறைத்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்த யோசனை முன்வைக்கப்படுவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
விபத்துக்குள்ளாகும் வாகனங்களுக்காக தண்டப் பணத்தை காப்புறுதி நிறுவனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அத்துடன், வாகனங்களை புதுப்பிக்கும் வகையில் அலங்காரங்களை மேற்கொள்வதற்கும் பணம் அறவிடப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன், துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க யோசனை முன்வைக்கப்படுகின்றது.
இதன்படி, துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்காக வரி மற்றும் தண்டப்பணத்தை செலுத்துவதன் ஊடாக, வாகனங்களை விடுவித்துக் கொள்ள முடியும் என நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார். (TrueCeylon)