எதிர்வரும் மூன்று வருடங்களில் லயின் குடியிருப்புக்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
லயின் குடியிருப்புக்களை அகற்றி, தனி வீடுகளை நிர்மாணித்துக்கொடுப்பதற்காக 2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். (TrueCeylon)