இலங்கையிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணங்கள் மற்றும் நன்மைகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்திலேயே இந்த நன்மைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொவிட் தொற்றினால் வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் 700 மில்லியன் ரூபா வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நாடு முழுவதும் 7 லட்சத்திற்கும் அதிகமான முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளதாக நிதி அமைச்சர் சபையில் கூறியிருந்தார்.
இவ்வாறு நாடு முழுவதும் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நன்மைகளை செய்யும் வகையில், முச்சக்கரவண்டி அதிகார சபையொன்றை உருவாக்குவதற்கான யோசனையொன்றும் நிதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)