Tamil news Sri Lanka

மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள்? மக்களுக்கு எச்சரிக்கை


கொவிட் கட்டுப்பாட்டிற்கு மக்கள் வழங்கும் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொவிட் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அதனை தொடர்ந்தும் முடிந்தவரை முன்னெடுப்போம் என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக, கொவிட் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மிக உயர்ந்த நடவடிக்கைகளை எடுக்கும் போது மக்கள் தங்களின் உயரிய பங்களிப்பை வழங்க வேண்டும்.

அவர்கள் வழங்குகின்ற பங்களிப்புக்கு அமைய கொவிட் தொற்று பரவல் கட்டுப்படுத்த்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும், கொவிட் கட்டுப்பாட்டிற்கு மக்கள் வழங்கும் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும்.

மக்கள் அதற்கு எதிர்மறையாக நடந்துகொண்டால், மீண்டும் பயணக் கட்டுப்பாடு போன்றதொரு சூழலை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



Source link

Related posts

25ம் திகதி பாடசாலை செல்லும் ஆசிரியர்கள், அன்றும் போராட்டம் செய்ய தீர்மானம்

Rohan

மஹிந்த மற்றும் பசிலுடன் கலந்துரையாடுங்கள் – பங்காளி கட்சிகளுக்கு கோட்டாபய உத்தரவு

Rohan

ஐரோப்பிய நாடுகளுக்குள் படையெடுத்தது ஒமிக்ரோன் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy