மதுபானத்திற்கான விலை உடன் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, நிதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மதுபானம் மீதான வரியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மது வரியை அதிகரிப்பதன் ஊடாக, 20 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் அவர கூறுகின்றார்.
இதற்கமைய, மதுபானங்களுக்கான விலை இன்று முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மதுபானத்தின் விலை அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது.(TrueCeylon)