அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கத்தினால் 30,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இன்று சமர்ப்பித்து உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த 30,000 மில்லியன் ரூபா மேலதிக ஒதுக்கீடாகவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினையை ஒரே தடவையில் தீர்க்கும் வகையிலேயே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், பட்டதாரிகளுக்கு ஜனவரி மாதம் முதல் நிரந்தர நியமனங்களை வழங்குவதற்காக 7600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (TrueCeylon)