Tamil news Sri Lanka

T20 WORLD CUP :- இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கின்றது அவுஸ்திரேலியா


உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ள அவுஸ்திரேலியா அணி தகுதிப் பெற்றுள்ளது.

 

பாகிஸ்தானுடனான அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா 5 விக்கெட்களினால் வெற்றியீட்டியது.

இங்கிலாந்து அணியுடனான முதலாவது அறையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றியை தன்வசப்படுத்தி, ஏற்கனவே இறுதிப் போட்டிக்காக தெரிவாகியுள்ளது.

இந்த நிலையில், இரண்டாவது அறையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (12) மோதின.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 176 ஒட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஷ்வான் 67 ஓட்டங்களையும், பகார் சமன் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து  177 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.

இதன்படி, எதிர்வரும் 14ம் திகதி நடைபெறும் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

NEWS JUST IN:- படகு கவிழ்ந்த சம்பவத்தை அடுத்து, கிண்ணியாவில் அமைதியின்மை (VIDEO)

Rohan

இராஜினாமா கடிதத்துடன் ஜனாதிபதியை சந்திக்கச் சென்றாரா அலி சப்ரி??

Rohan

முக்கிய தீர்மானங்களை எடுக்க தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy