Tamil news Sri Lanka

மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு எமனாக மாறிய தென்னை மரம்


வீதியில் பயணித்துக்கொண்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (10) அனுராதபுரம், மிஹிந்தலை வீதி, நரியங்குளம சந்தியில் இடம்பெற்றுள்ளது.

மின்கம்பிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் மரங்களை ஒப்பந்த அடிப்படையில் அகற்றும் போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும் சைக்கிளில் பயணித்தவரும் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் உஸ்வெவ, பஹலகம பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 18 மற்றும் 30 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Source link

Related posts

மொனராகலையில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்

Rohan

அத்துரெலிய ரதன தேரர், கட்சியிலிருந்து நீக்கம்

Rohan

ஏன் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கின்றன? பாராளுமன்றத்தில் வெளியானது காரணங்கள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy