Tamil news Sri Lanka

புதையல் தோண்ட முயற்சித்த ஐவர் கைது (PHOTOS) – Trueceylon News (Tamil)


அவிசாவளை − தெரணியகல பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெரணியகல, உடஹேன்கந்த பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்த கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட ஐவரே சந்தேகத்தின் பேரில் தெரணியகல பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெரணியகல, தெஹியோவிட்ட, தொம்பே, அளுத்கம மற்றும் ஆனமடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறுகின்றனர்.

பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த அழைப்பின் பேரில், தெரணியகல பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின் போது சொகுசு கார் ஒன்றும், பல புதையல் தோண்டும் கருவிகளும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

தண்டப் பத்திரம் பெற்ற சாரதிகளுக்கு ஓர் அறிவிப்பு

Rohan

தலைசுற்ற வைக்கு போஞ்சி, தக்காளி மற்றும் கறி மிளகாயின் விலை

Rohan

பிரித்தானிய MP மீதான கத்தி குத்து, பயங்கரவாத செயல் என அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy