Tamil news Sri Lanka

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க


சிறைத்தண்டனை அனுபவிக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதை தெரிவித்துள்ளார்.

காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக நேற்று மாலை காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய ரஞ்சனுக்கு எலும்பியல் சிகிச்சைப் பிரிவில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதன் காரணமாக அவர் வெலிகடை சிறைச்சாலையின் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Source link

Related posts

போராடும் அதிபர்−ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்காதிருக்க ஒரு மாகாண ஆளுநர் தீர்மானம்

Rohan

இலங்கை பாதாளக்குழு உறுப்பினர் அங்கொட லொக்கா உயிரிழந்தது உறுதியானது

Rohan

தோட்ட அதிகாரியின் அராஜகத்தை கண்டித்து மக்கள் கொழும்பு வீதியில் ஆர்ப்பாட்டம் (PHOTOS) – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy