Tamil news Sri Lanka

கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு


எதிர்வரும் வார இறுதியில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் மாதத்தின் 13 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணி தொடக்கம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 04, 05, 06, 07 மற்றும் 08
கோட்டை மற்றும் கடுவலை மாநகர சபை அதிகாரப்பிரிவு, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபை அதிகாரப்பிரிவுக்கே நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தலையில் இருந்து கோட்டை நீர் தடாகத்திற்கு நீரை விநியோகிக்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.



Source link

Related posts

வெளிநாட்டவர்களால் இலங்கைக்கு மீண்டும் ஆபத்து!

Rohan

நிரூபமா விவகாரம்! ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிகாவை இழுத்துவிட்ட நாமல்

Rohan

3 மாத காலப்பகுதியில் முன்னாள் போராளிகள் 39 பேர் அதிரடி கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy