Tamil news Sri Lanka

ஐ.தே.க கொழும்பில் நாளை பாரிய ஆர்ப்பாட்டம் (PHOTOS) – Trueceylon News (Tamil)


எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாளைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளது.

கொழும்பு – லிப்டன் சுற்று வட்டத்திற்கு அருகில் நாளை மாலை இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக எந்தவித நிவாரணமும் மக்களுக்கு கிடைக்காது எனவும், மக்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கோரியே இந்த ஆர்;ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இதன்போது எதிர்ப்பு தெரிவிக்கப்படவுள்ளதாகவும் கட்சியின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, பாலித்த ரங்கே பண்டார உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். (TrueCeylon)

 



Source link

Related posts

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நன்மையான வரவு செலவுத்திட்டம்

Rohan

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிக்கு திடீரென ஏற்பட்ட மனமாற்றம்!!

Rohan

24 மணிநேரப் பகுதியில் 95 பேர் கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy