Tamil news Sri Lanka

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ரணில் இன்று ஏற்றுக்கொண்ட ஒரு விடயம்


ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கையின் புலனாய்வு துறை வலுவிழந்திருந்ததை தான் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

அவ்வாறு புலனாய்வுத்துறை வலுவிழந்திருந்தமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தாக்குதல் நடத்தப்படும் என 4ம் திகதி இந்தியாவிடமிருந்து தகவல் கிடைத்ததன் பின்னர், என்ன செய்தார்கள் என்பது குறித்து தனக்கும் அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

குண்டு வெடிப்பு இடம்பெற்றதன் பின்னர், குற்றவாளிகளை கைது செய்ய  பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு அதிகாரிகளே இந்த சம்பவம்  தொடர்பிலான விசாரணைகளுக்காக முக்கிய பங்கை வகித்தார்கள் என கூறிய அவர், புலனாய்வு பிரிவு அதனை செய்யவில்லை எனவும் குறிப்பிட்டார்.

புலனாய்வுத்துறை வலுவிழந்தமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், வலுவிழந்தமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். (TrueCeylon)




Source link

Related posts

சீனாவுக்கு பதில் வழங்கியது BOC – Trueceylon News (Tamil)

Rohan

வனிந்து ஹசரங்க படைத்த மற்றுமொரு சாதனை (சாதனை பட்டியல் இணைப்பு)

Rohan

கொழும்பு − கண்டி வீதி திறக்கப்படுமா? − மண்சரிவு அபாயத்தினால் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறும் கோரிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy