Tamil news Sri Lanka

இன்றும் மண்சரிவு l இருவர் உயிரிழப்பு − இருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்


கேகாலை − ஹத்னாகொட பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் ஒருவர் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

மேலும், அனர்த்தத்தில் இருவர் காணாமல் போயுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிலையம் கூறுகின்றது.

தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ள அதேவேளை, தாய் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குருநாகல் − ரிதிகம பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

பொலிஸார் விடுத்த விசேட அறிவிப்பு – இன்றைய தினம் ஏற்படும் கடும் நெரிசல் ?

Rohan

ஆசிரியர் தினம் இன்று l ஆசிரியர், அதிபர் போராட்டமும் இன்று

Rohan

சரத் வீரசேகரவின் உடல் நிலை தொடர்பில் வெளியான புதிய தகவல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy