கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கன்ன பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் பலர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
ஆரம்பகட்ட தகவல்களுக்கு அமைய 4 பேர் காணாமல் போயுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.
எனினும், வீட்டில் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை என அவர் கூறுகின்றார்.
பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்தே, இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார். (TrueCeylon)