Tamil news Sri Lanka

12 உயிர்களை பலியெடுத்த இயற்கை l 28,000திற்கும் அதிகமானோர் பாதிப்பு


நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் 4 உயிரிழப்புக்களும், கேகாலை மாவட்டத்தில் 3 உயிரிழப்புக்களும், குருநாகல் மாவட்டத்தில் 2 உயிரிழப்புக்களும், மாத்தளை, முல்லைத்தீவு, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஐவர் காயமடைந்துள்ளனர்.

7529 குடும்பங்களைச் சேர்ந்த 28,263 பேர் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

மன்னார் மாவட்டமே அதிகளவிலான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 3501 குடும்பங்களைச் சேர்ந்த 12,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 819 குடும்பங்களைச் சேர்ந்த 3253 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 816 குடும்பங்களைச் சேர்ந்த 3190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 595 குடும்பங்களைச் சேர்ந்த 2574 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, குருநாகல் மாவட்டத்தில் 437 குடும்பங்களைச் சேர்ந்த 1184 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் 466 குடும்பங்களைச் சேர்ந்த 2180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் 347 குடும்பங்களைச் சேர்ந்த 1198 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 342 குடும்பங்களைச் சேர்ந்த 1657 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சிலரே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அனர்த்த நிலைமை குறைவடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

17 மாவட்டங்களிலுள்ள 93 பிரதேச செயலக பிரிவுகள், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளன. (TrueCeylon)



Source link

Related posts

பொலிஸ் உத்தியோகத்தரை இழுத்துக்கொண்டு சென்ற மோட்டார் சைக்கிள் (VIDEO)

Rohan

ரணில் பிரதமராக மைத்திரி ஆதரவு – Trueceylon News (Tamil)

Rohan

BREAKING NEWS :- மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் சேர்த்தது சீனா

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy