Tamil news Sri Lanka

வௌ்ள நிலைமை தொடர்பான தற்போதைய நிலை – அவதானமாக இருக்குமாறு கோரிக்கை


அதிக மழைவீழ்ச்சி காரணமாக நாடளாவிய ரீதியில் பல ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன.

களனி கங்கையின் தாழ் நிலப்பகுதியில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் தெஹியேவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்போ, கடுவல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தள பிரதேச சபைக்கு உட்பட்ட தாழ்வு பகுதிகளில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வரதகொல்ல, நாஉல்ல, திவுல்தெனிய மற்றும் வெலிஹித கிராம சேவைக்கு உட்பட்ட பகுதி மற்றும் அளவ்வ, மீரிகம, வென்னப்புவ, நீர்கொழும்பு மற்றும் கட்டான பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளின் தாழ்வு நிலப்பகுதியில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சீத்தாவக கங்கையும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

பரீட்சைகளுக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியாகின

Rohan

BREAKING NEWS :- காலி முகத்திடல் போராட்டம் – மஹிந்த விடுத்த அவசர அழைப்பு 

Rohan

இராஜகிரியவில் பொலிஸ் அதிகாரியை மோதிய பிரதான சந்தேகநபர் நீதிமன்றில் சரண்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy