Tamil news Sri Lanka

வாகன உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு எவ்வித தடையும் இல்லை


அந்நிய செலாவணி நெருக்கடியால் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என இராஜாங்க அமைச்சரான ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலைகளை அநியாயமாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மைய மாதங்களில் வாகன உதிரி பாகங்களின் விலைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரூபாவை வலுப்படுத்தவும், உள்நாட்டு சந்தையில் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்புக்கு தீர்வுகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



Source link

Related posts

அத்தியாவசியமற்ற பொருட்கள் மீதான இறக்குமதி வரையறை நீக்கம்

Rohan

திருகோணமலை எண்ணெய் குதங்களுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

Rohan

மிகக் குறைந்தளவான கொரோனா மரணங்கள் பதிவு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy