Tamil news Sri Lanka

மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (10) விசேட விடுமுறை


வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (10) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவிக்கின்றார்.

வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்களும் வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அந்த மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்த பரிந்துரைக்கமைய மாகாண ஆளுநரின் அனுமதியுடன் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு நேற்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், இன்று வட மாகாணத்தின் மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

அரசாங்கத்துக்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம்

Rohan

CIDயின் 5வது மாடியில் பாய்ந்து தற்கொலை செய்த பெண் l விசாரணை ஆரம்பம்

Rohan

சடுதியாக அதிகரித்தது கொரோனா மரணங்கள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy