Tamil news Sri Lanka

பசறை ஆலயமொன்றில் பெறுமதியான முருகன் சிலை கொள்ளை (PHOTOS)


பதுளை − பசறை − கோணக்கலை காவத்தை தோட்டத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பெறுமதி வாய்ந்த சிலையொன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.

50 வருடங்கள் பழைமை வாய்ந்த சிவசுப்ரமணியர் ஆலயத்தில் காணப்பட்ட உலோகத்திலான முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராய் எழுந்தருளி சிலையொன்றே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனந்தெரியாத நபர்களால் நேற்றைய தினம் ஆலய கதவு உடைக்கப்பட்டு, இந்த சிலை கொள்ளையிடப்பட்டுள்ளது.

ஆலய கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில் சிலை காணாமல் இருப்பதை அறிந்த பிரதேச மக்கள் பசறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

NEWS JUST IN :- பொது போக்குவரத்து தொடர்பில் சற்று முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பு

Rohan

இலங்கை வருவோருக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை – Trueceylon News (Tamil)

Rohan

பேஸ்லைன் வீதி – ஒருகொடவத்தை சந்தி முடக்கம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy