மஹாஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக கிரிவுல்ல நகரம் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக குருணாகல் – கொழும்பு (வழித்தட இலக்கம் 5) வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வீதியூடாக பயணிக்கும் பொதுமக்கள், சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.