கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால், ரயில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய, ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.
இதையடுத்து, குறித்த மார்க்கத்தின் ஊடான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மலையகத்திற்கான ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாடு நிலையம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதாக அவர் கூறுகின்றார். (TrueCeylon)