கதிர்காமம் முருகன் ஆலயத்திலிருந்த 50 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக்கல் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரினால் இந்த இரத்தினக்கல் கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு நேர்த்தி கடனுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கதிர்காமம் முருகன் ஆலயத்தில் காணாமல் போனதான கூறப்படும் 38 பவுன் எடையுடைய தங்கத் தகடு குறித்து, பிரபல போதைப்பொருள் வர்த்தகராக திகழ்ந்த அங்கொட லொக்காவின் மனைவியிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று வாக்குமூலம் பதிவு செய்துக்கொண்டனர்.
2019ம் ஆண்டு ஜுலை மாதம் 03ம் திகதி இந்த தங்கத் தகடு, கதிர்காமம் ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அங்கொட லொக்காவின் மகனுக்கான நேர்த்தி கடனை நிறைவேற்றும் வகையிலேயே இந்த தங்கத் தகடு, ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. (TrueCeylon)