Tamil news Sri Lanka

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் திடீரென மாயம்


கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் மூன்று சிறுமிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

13 முதல் 15 வயது வரையான மூன்று சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளும், உறவு முறை சிறுமி ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக நேற்றைய தினம் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமிகள் காணாமல் போயுள்ளமை குறித்து, பெற்றோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

BREAKING NEWS:- ரஷ்யா – யுக்ரேன் பேச்சுவார்த்தை ஆரம்பம்

Rohan

உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள புடின் அதிரடி உத்தரவு!!

Rohan

தொடர்ந்து நிலைகொண்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy