நாட்டின் பல பகுதிகளில் இன்று 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமேல், மேல், சபரகமுவ ஆகிய மாவட்டங்களிலும், அநுராதபுரம், திருகோணமலை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கு அதிக மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தளை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. (TrueCeylon)