கடந்த இரு வாரங்களில் வீடுகளில் சிகிச்சைப் பெற்றுவரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரையில் சுமார் 4000 பேர் வரை கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இவர்களில் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் 3000 புதிய கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 500 கொரோனா நோயாளர்கள் புதிதாக வீடுகளில் இருந்து சிகிச்சைப் பெறுவதற்கு பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, டிசம்பர் மாதத்தில் இலங்கையில் புதிய கொரோனா அலை ஏற்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.