Tamil news Sri Lanka

கதிர்காமம் ஆலயத்தில் காணாமல் போன தங்கத் தகடு l அங்கொட லொக்கா தொடர்பா? − விசாரணையில் வெளிவந்த தகவல்


வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலயத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 38 பவுண் எடையுடைய தங்கத் தகடு தொடர்பிலான வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, இந்தியாவில் உயிரிழந்த பிரதான போதைப்பொருள் வர்த்தகராக விளங்கிய அங்கொட லொக்காவின் மனைவியை குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைத்துள்ளது.

2019ம் ஆண்டு கதிர்மாமம் உற்சவத்தின் போது, அங்கொட லொக்காவின் மனைவியினால் இந்த தங்கத் தகடு, கதிர்காமம் ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தங்கத் தகடு ஆலயத்திற்கு வழங்கப்பட்டமைக்கான காரணத்தை அறிந்துக்கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலன்னாவ பகுதியில் தற்போது வசிக்கும் அங்கொட லொக்காவின் மனைவி, கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த தங்கத் தகடு ஒரு வருட காலத்திற்கு முன்பே காணாமல் போயுள்ளதாகவும், சம்பவம் குறித்த விசாரணைகள் இரு வாரங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யும் – Trueceylon News (Tamil)

Rohan

நேற்று உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்

Rohan

நாடு முழுவதும் நாளை (01) இருளில் – அறிவிப்பு வெளியானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy