உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிக்கு நான்கு அணிகள் தெரிவாகியுள்ளன.
இதன்படி, நவம்பர் மாதம் 10ம் திகதி இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் முதலாவது அரையிறுதி போட்டியில் மோதவுள்ளன.
அபுதாபியில் எதிர்வரும் 10ம் திகதி இரவு 7:30க்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி டுபாயில் எதிர்வரும் 11ம் திகதி இரவு 7:30க்கு ஆரம்பமாகவுள்ளது.
உலகக் கிண்ணம் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)