சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பலின் ஏற்றுமதியாளரான Qingdao Seawin Biotech நிறுவனம், தேசிய தாவர தனிமைப்படுத்தல் நிறுவனத்திடம் இழப்பிடு கோரி கடிதம் அனுப்பியுள்ளது.
தேசிய தாவர தனிமைப்படுத்தல் நிறுவனத்தின் கவனயீனமான செயற்பாடு மற்றும் உண்மைக்கு புறம்பான அறிக்கை காரணமாக தமது நிறுவனத்திற்கு 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக NEWS 1ST செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கடிதம் கிடைக்கப் பெற்று மூன்று நாட்களுக்குள் தமக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் சீன நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்வாறான இழப்பீடு கடிதமொன்று இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என விவசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளதாக NEWS 1ST செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.