Tamil news Sri Lanka

4 வகுப்புக்களுக்கு பாடசாலை இன்று (08) ஆரம்பம் l மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விசேட அனுமதி


நாடு முழுவதும் உள்ள அரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற பாடசாலைகளின் தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று (08) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் விதம் தொடர்பிலான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கின்றார்.

இந்த வகுப்புக்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அந்த வகுப்புக்களுடன் தொடர்புடைய பாடசாலை நிர்வாகத்தினர் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுடைய தாய்மார் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க தேவையில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், நோய்களுக்காக சிகிச்சைகளை பெற்று வரும் ஆசிரியர்கள், அத்தியாவசிய விடயங்களுக்கு மாத்திரமே பாடசாலைகளுக்கு அழைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடை அணிவது அத்தியாவசியம் கிடையாது என அமைச்சு கூறுகின்றது.

பாடசாலைகளுக்கு அணியும் விதத்திலான தகுந்த ஆடைகளை அணிந்து, மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கின்றார். (TrueCeylon)

தொடர்புடைய செய்தி :- பாடசாலை மாணவர்களுக்கு புதிய கல்வி திட்டம் திடீரென அறிவிப்பு



Source link

Related posts

சர்வகட்சி மாநாடு – ஜனாதிபதிக்கு அடுத்தடுத்து விழும் அடி

Rohan

12 உயிர்களை பலியெடுத்த இயற்கை l 28,000திற்கும் அதிகமானோர் பாதிப்பு

Rohan

ரஞ்ஜனிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மீட்பு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy