Tamil news Sri Lanka

மலையகத்தின் ஒரே இடத்தில் ஐந்து வயதுக்கு குறைவான 27 சிறார்களை தாக்கியது கொவிட் – சிறுவர் இல்லம் அபாயத்தில்


பண்டாரவளை சிறுவர் இல்லமொன்றிலுள்ள ஐந்து வயதுக்கு குறைவான 27 சிறுவர்கள் உள்ளிட்ட 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பண்டாரவளை சுகாதார வைத்திய அதிகாரி D.M.A.R.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறுவர் இல்லத்தில் கடமைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு நடத்தப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளில், 32 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள், வைத்திய கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகளின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த சிறுவர் இல்லத்தில் ஐந்து வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருக்கின்றமையினால், இந்த சிறுவர் இல்லம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக பண்டாரவளை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

இன்புளுவன்ஸா + கொரோனா = ப்லோரோனா l முதல் நோயாளர் அடையாளம் காணப்பட்டார்

Rohan

பாகிஸ்தானில் திடீர் வெடிப்புச் சம்பவம்! 10 பேர் பலி

Rohan

பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy