யாழ்ப்பாணம் திருஞானசம்பந்தர் மடத்தின் நல்லை ஆதீனம் குருவை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, செந்தில் தொண்டமான், நல்லை ஆதீன குருவை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி ஆணைக்குழு குறித்து செந்தில் தொண்டமான், நல்லை ஆதீன குருவிற்கு தெளிவூட்டியுள்ளார்.
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கோட்பாட்டில் இந்து சமய சட்டங்கள், இந்து சமயத்தின் கொள்கைகள், முக்கியத்துவம் போன்றவற்றை பாதுகாப்பது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)