Tamil news Sri Lanka

உடைப்பெடுக்கும் நிலையில் நொச்சிக்குளம் : விரைந்து செயற்பட்ட அதிகாரிகள்


வவுனியாவில் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி வருகின்றது.

இதனையடுத்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் இராணுவத்தினர், நகர சபையின் தீயணைப்பு பிரிவு, கமநல அபிவிருத்தி திணைக்களத்தினர் இணைந்து குளக்கட்டில் மண் பைகளை இட்டு குளம் உடைப்பெடுக்காமல் தடுக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த குளம் உடைப்பெடுத்தால் அதன் கீழ் உள்ள 98 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் அழிவடைவதுடன், பல குடிமனைகளும் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்படும். உடைபெடுப்பதை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.



Source link

Related posts

கொழும்பு வீதிகளில் போக்குவரத்துக்கு பாதிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

ராகலையை அதிர வைத்த மரணங்கள் l 5 சடலங்களும் அடக்கம் (PHOTOS)

Rohan

பரீட்சைகளுக்காக மாணவர்களுக்கு தனித்துவ இலக்கம் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy