Tamil news Sri Lanka

BREAKING NEWS:- பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு வெளியானது


நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளின் தரம் 10, 11, 12 மற்றும் 13ம் வகுப்புக்களை எதிர்வரும் 8ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றவுடன், 6ம் தரம் முதல் 9ம் தரம் வரையான வகுப்புக்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், தற்போது காணப்படுகின்ற கால எல்லையை முகாமைத்துவப்படுத்தி, பாட விதானங்களை கற்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும், பரீட்சைகளை நடத்தும் விதம் குறித்து, பரீட்சை திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார். (TrueCeylon)




Source link

Related posts

மூடப்பட்டது கொழும்பின் முக்கிய வீதி – Trueceylon News (Tamil)

Rohan

இன்றிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்குமா? – Trueceylon News (Tamil)

Rohan

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy