Tamil news Sri Lanka

23 தமிழக மீனவர்களும் யாழ் சிறைச்சாலைக்கு மாற்ற அனுமதி


காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை, யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 11ஆம் திகதி இரண்டு படகுகளில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைத்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த மீனவர்களை இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடற்படை முகாமில் உள்ள தமிழக மீனவர்கள் 23 பேரையும், யாழ்ப்பாண சிறைக்கு மாற்றுமாறு, யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிவான், கைது செய்யப்பட்ட அனைவரையும் யாழ்ப்பாண சிறையில் வைக்க உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



Source link

Related posts

வீடு வாங்க இலகுத் திட்டம் l அரசாங்கம் அனுமதி

Rohan

இலங்கையின் சில பகுதிகளுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை (WEATHER MAP)

Rohan

நேற்று 60ஐ தாண்டிய கொரோனா மரணங்கள் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy