Tamil news Sri Lanka

14 பேரின் உயிரை காவுக்கொண்ட பதுளை பஸ் விபத்தின் சாரதி திடீரென உயிரிழப்பு


பதுளை − பசறை பகுதியில் 14 உயிர்களை காவுக்கொண்ட பஸ் விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, அவர் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் வெல்லவாய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இவ்வாறு வெல்லவாய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு ஏற்பட்டமை உயிரிழப்புக்கான காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த நபருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில், கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படாததை அடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பதுளை − பசறை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி, கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ், பள்ளமொன்றில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்திருந்ததுடன், 33 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

”எதிர்கட்சி ஆர்ப்பாட்டத்தை நாளை (16) நடத்த இடமளிக்க மாட்டேன்”

Rohan

இன்றிரவு முதல், இரவு வேளைகளில் முடங்கும் இந்திய தலைநகர்

Rohan

யாழில் இந்து ஆலயத்திற்குள் காலணியுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரி! (படங்கள் இணைப்பு)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy